மிகவும் பிரபல மெசேஜ் அப்ளிகேஷன் ஆன Hike இன் செயல்பாட்டை நிறுத்திவிட்டதாக அந்த செயலின் உரிமையாளரான kavin Bharti Mittal தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
Hike அப்ளிகேஷன் ஆனது இந்திய மக்களிடையே பெரிதும் வரவேற்பைப் பெற்ற மெசேஜிங் செயலி ஆகும்.
அதிலுள்ள ஸ்டிக்கர்ஸ் என்ற ஆப்ஷன் ஆனது அனைத்து மக்களிடமும் பெரிதும் வரவேற்பைப் பெற்ற சிறப்பம்சம் ஆகும்.
மேலும் Hike அப்ளிகேஷன் கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து நீக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே Hike செயலியை பயன்படுத்திக் கொண்டிருக்கும் பயனர்களுக்கு அவர்களது தகவல்களை டவுன்லோட் செய்வதற்கான ஆப்ஷன்களை உருவாகியுள்ளதாக kavin Bharti Mittal தெரிவித்துள்ளார்.
Vibe and Rush
Hike செயலியை நிறுத்துவதற்கான காரணம் எதுவும் தெரிவிக்காத kavin Bharti Mittal , Hike அப்ளிகேஷனுக்கு பதிலாக புதிய 2 செயலிகளை அறிமுகப்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளார்.
Vibe என பெயரிடப்பட்டுள்ள இந்த மெசேஜர் அப்ளிகேஷன் ஆனது Hike அப்ளிகேஷனுக்கு பதிலாக அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் சிறப்பம்சங்களை கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த செயலியானது விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் Hike நிர்வாகம் சார்பில் இரண்டாவதாக அறிமுகப்படுத்த உள்ள Online Gaming அப்ளிகேஷனுக்கு Rush என பெயரிடப்பட்டுள்ளது.
இந்த அப்ளிகேஷன் ஆனது தற்போது ஆப்பிள் பிளே ஸ்டோரில் செயல்பாட்டில் உள்ளது. ஆண்ட்ராய்டு பயன்பாட்டாளர்களுக்கு விரைவில் அந்த அப்ளிகேஷன் அறிமுகப்படுத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
ConversionConversion EmoticonEmoticon