Translate

வெளியானது Windows 11 - இனி ஆண்ட்ராய்டு Appsஐ Easy-யா கம்ப்யூட்டரில் Use பண்ணலாம்!

 

Windows 11, windows 11 Features, windows 11 update,

நேற்று நடைபெற்ற Microsoft official launch இல் Windows 11 operating system  ஆனது அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.

மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளிவந்துள்ள Windows 11 operating system பலவகையான சிறப்பம்சங்களுடன் வெளிவந்துள்ளது. 

அதில் ஒரு சிறப்பம்சமாக இனி நம் மொபைலில் உபயோகப்படுத்தும் ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன்களை நேரடியாக Windows 11 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் பயன்படுத்தும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பயனர்கள் Amazon அப்ளிகேஷன் ஸ்டோரில் இருந்து தங்களுக்குத் தேவையான ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன்களை நேரடியாக Windows 11 operating system  இன்ஸ்டால் செய்து உபயோகப்படுத்தலாம்.

இது போன்றே  multitasking, start menu போன்றவற்றில் பல புதிய சிறப்பம்சங்களுடன் விண்டோஸ் 11 வெளியிடப்பட்டுள்ளது.

 மேலும் ஏற்கனவே விண்டோஸ் 10 ஆப்ரேட்டிங் சிஸ்டத்தை உபயோகப்படுத்தும் பயனர்கள்  நேரடியாக இந்த Windows 11 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை இன்ஸ்டால்  செய்து கொள்ளலாம். ஆனால் நீங்கள் உபயோகப்படுத்தும் கம்ப்யூட்டர் Windows 11 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை  சப்போர்ட் செய்யும் ஸ்பெசிஃபிகேஷனை கொண்டுள்ளதா என்பதை சரி பார்த்த பிறகே Windows 11 operating system  இன்ஸ்டால் செய்ய முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது தங்களது பயனர்கள் மட்டும் Windows 11 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை இன்ஸ்டால் செய்து கொள்ளும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் அனைவரும் பயன்படுத்தும் வகையில் Windows 11 ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆனது வெளியிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.


Previous
Next Post »