உங்களது மொபைலில் உள்ள இமெயில் ஐடியை நேரடியாக உங்களால் Delete செய்யவோ அல்லது மொபைலில் இருந்து நீக்கவோ முடியாது. உங்களது மொபைலில் உள்ள Google Play Store போன்ற அப்ளிகேஷன்களை பயன்படுத்துவதற்கு இமெயில் ஐடி மிகவும் அவசியமானது என்பதால் அதனை நீக்குவதற்கு சில வழிமுறைகள் உள்ளது.
இமெயில் ஐடியை Delete செய்வதற்கான வழிமுறைகள் step-by-step கீழே உள்ளது. இந்த வழிமுறைகளை பயன்படுத்தி உங்களது மொபைலில் உள்ள எந்த ஒரு இமெயில் ஐடியையும் சுலபமாக உங்களது மொபைலில் இருந்து நீக்கலாம்.
Step 1
முதலில் உங்களது மொபைலில் உள்ள ஜிமெயில் அப்ளிகேஷனை Open செய்யவும்.
Step 2
பிறகு இடது பக்கத்தின் மேலே உள்ள ஆப்ஷனை பயன்படுத்தி, Settings ஆப்ஷனை Open செய்யவும்.
Step 3
பிறகு வலது பக்கத்தில் மேலே உள்ள மூன்று புள்ளிகளை கிளிக் செய்து அதில் உள்ள Manage Account என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
Step 4
இங்கு உங்களது மொபைலில் உள்ள அனைத்து இமெயில் ஐடிகளும் இருக்கும் இதில் எந்த இமெயில் ஐடியை நீங்கள் Delete செய்ய விரும்புகிறீர்களோ அந்த ஐடியை கிளிக் செய்யவும்.
Step 5
நீங்கள் Delete செய்வதற்கான இமெயில் ஐடியை கிளிக் செய்தவுடன் கீழே Delete Account அல்லது Remove Account மற்றும் Syn now என்ற ஆப்ஷன்கள் இருக்கும்.
இதில் Delete Account அல்லது Remove Account என்ற ஆப்சனை கிளிக் செய்து, அதனை உறுதிப்படுத்துவதற்காக அங்குத் தோன்றும் Ok என்ற பட்டனை கிளிக் செய்தால் நீங்கள் Select செய்த இமெயில் ஐடி ஆனது உங்களது மொபைலில் இருந்து Delete ஆகிவிடும்.
Note:
இப்பொழுது நீங்கள் டெலீட் செய்த இந்த இமெயில் ஐடியை திரும்பவும் உங்களது மொபைலில் Add செய்ய முடியும். மேலே உள்ள இந்த வழிமுறைகள் ஆனது உங்களது மொபைலில் உள்ள இமெயில் ஐடியை Remove செய்ய மட்டுமே உங்களுக்கு உதவும். இந்த வழிமுறைகளைப் பயன்படுத்தி உங்களால் உங்களது இமெயில் ஐடியை நிரந்தரமாக டெலிட் செய்ய முடியாது.
ConversionConversion EmoticonEmoticon