அனைத்து விதமான ஆண்ட்ராய்டு மொபைல்களை பயன்படுத்துவதற்கு Google Account மிகவும் முக்கியமானதாகும். உங்களது மொபைலில் உள்ள Google Play Store, Google Map, Google Drive, Google Duo, Google Email, Google News, Google Shopping, Google Photos, Google Docs, Google Sheets போன்ற அப்ளிகேஷன்களை உபயோகப்படுத்துவதற்கு Google Account தேவைப்படுகிறது.
சுலபமாக எவ்வாறு கூகுள் அக்கவுண்ட்டை உருவாக்குவது என்பதை கீழே step-by-step பார்க்கலாம்
How to Create New Google Account
Step 1 ( Open any Browser )
முதலாவது ஏதாவது ஒரு Browserஐ ஓபன் செய்து அதில் Gmail என Type செய்து Search செய்யவும்.
Step 2
அங்கு Sign in Google Account என்ற ஆப்ஷன் இருக்கும் அந்த ஆப்ஷனை கிளிக் செய்து இடதுபக்கத்தில் உள்ள Create Account என்ற ஆப்ஷனை கிளிக் செய்வதன் மூலமாக புதிய Google Accountஐ உருவாக்கும் பக்கத்திற்கு செல்லலாம்.
(அல்லது)
அங்கு மேலும் உள்ள Create Your Google Account என்ற ஆப்ஷனை கிளிக் செய்வதன் மூலமாக நேரடியாக புதிய Google Account உருவாக்கும் பக்கத்திற்கு செல்லலாம்.
(அல்லது)
கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்
Create New Google Account
Step 3 ( Create Your Google Account )
மேலே உள்ள லிங்கை கிளிக் செய்தவுடன் புதிய கூகுள் அக்கௌன்ட் ஐ உருவாக்குவதற்கான Form தோன்றும். இங்கு கேட்கப்பட்டுள்ள first name, last name, username, password and confirm password ஆகியவற்றை சரியாக உள்ளிட்டு கீழே உள்ள Next பட்டனை கிளிக் செய்யவும்.
நீங்கள் டைப் செய்த Username (email id ) ஏற்கனவே உபயோகத்தில் இருந்தால் அங்கு username already taken அல்லது username is not allowed எனத் தோன்றும்.
அப்பொழுது உங்களுக்கான Username உடன் மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட எண்களை பயன்படுத்தி உருவாக்கவும்.
பதிவு செய்த அனைத்து தகவல்களும் சரியானதாக இருந்தால் நீங்கள் Next பட்டனை கிளிக் செய்தவுடன் அடுத்த பக்கத்திற்கு செல்லும்.
குறிப்பு: இங்கு நீங்கள் பதிவு செய்த Username மற்றும் Password சரியாக ஞாபகம் வைத்துக் கொள்ளவும்.
Step 4 ( Fill Your Personal Details )
இங்கு உங்களது Mobile Number, Recovery Email id , Date of Birth மற்றும் Gender போன்ற தகவல்களை பதிவு செய்ய வேண்டும்.
Mobile number மற்றும் Recovery Email id உங்களுக்கு விருப்பம் இருந்தால் கொடுக்கலாம் இல்லை என்றால் பதிவு செய்ய வேண்டாம்.
இங்கு உள்ள தகவல்களை பதிவு செய்த பிறகு கீழே உள்ள Next பட்டனை click செய்ய வேண்டும்.
Step 5 ( Fill Your Personal Details )
இங்கு Google terms and conditions தோன்றும் அதனை படித்த பிறகு கீழே உள்ள Agree என்ற பட்டனை click செய்தால் உங்களுக்கான புதிய Google Account Create ஆகிவிடும்.
ConversionConversion EmoticonEmoticon