Translate

How to Check Youtube CTR, CPC, CPM, RPM, Ad Impression and Ad Revenue in Adsense Beta version

 கூகுளின் Youtube Channel மற்றும் Blogger போன்ற தளங்கள் மூலமாக அனைவராலும்  online இல் பணம் சம்பாதிக்க முடியும் என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மையே. அப்படியாக youtube மற்றும் Blogger   மூலமாக பணம் சம்பாதிப்பவர்களுக்கு Google Adsense மூலமாக பணம் அனுப்பப்படுகிறது.

மேலும் Google Adsense ஐ பயன்படுத்தி நமது  youtube, blogger மற்றும் admob அக்கவுண்ட்களின் CTR, CPC, CPM, RPM, ad Impression, ad revenue, payment details மற்றும் transaction details போன்றவற்றை நிர்வகிக்க முடியும்.

Google AdSense ஆனது கிளாசிக் வெர்ஷனில் இருந்து புதிதாக பீட்டா வெர்ஷனுக்கு மாற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் கூகுள் அட்சன்ஸ் இல் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி  youtube இன் CTR, CPC, CPM, RPM, ad Impression, ad revenue போன்ற அனைத்து தகவல்களை இனி ஆட்சென்ஸ் மூலமாக நிர்வகிக்கவோ அல்லது தெரிந்து  கொள்ளவோ முடியாது. 

மேலும் மேற்கண்ட அனைத்து தகவல்களையும் நிர்வகிக்கும் வசதி புதிதாக youtube beta version இல் add செய்யப்பட்டுள்ளது.

இதனால் youtube மூலம் பணம் சம்பாதிப்பவர்களுக்கு youtube இன் CTR, CPC, CPM, RPM, ad Impression, ad revenue போன்ற தகவல்களை எவ்வாறு தெரிந்து கொள்வது என்று பல குழப்பம் எழுந்துள்ளது. எவ்வாறு youtube இன் CTR, CPC, CPM, RPM, ad Impression, ad revenue போன்ற தகவல்களை தெரிந்து கொள்வது என்பதை step-by-step கீழே பார்க்கலாம்.


How to Check YouTube CTR, CPC, CPM, RPM, ad Impression, ad revenue

Step 1

முதலாவது  நீங்கள் மொபைல் பயன்படுத்துவோர் ஆக இருந்தால் உங்களது மொபைலில் உள்ள chrome browser ஐ ஓபன் செய்து அதை desktop வெர்ஷனில் மாற்றி பிறகு ங்களது யூடியூப் அக்கௌன்ட்டை லாகின் செய்து கொள்ளவும்.
( அல்லது )
நீங்கள் கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப் பயன்படுத்துவோர் ஆக இருந்தால் உங்களது கம்ப்யூட்டரில் ஏதாவது ஒரு browser ஐ ஓபன் செய்து உங்களது யூடியூப் அக்கௌன்ட்டை லாகின் செய்து கொள்ளவும்.

Step 2 

வலது பக்கத்தில் உள்ள உங்களது அக்கவுண்ட்டை கிளிக் செய்து அதில் Youtube Studio என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும். 

Step 3

பிறகு இடது பக்கத்தில் உள்ள analytics ஆப்ஷனை கிளிக் செய்து open செய்யவும்.

Step 4

இங்கு உங்களது youtube வீடியோக்கள் பெற்ற views, Revenue போன்ற  அனைத்து தகவல்களும் இருக்கும். அங்கு Overview ஆப்ஷனில் கீழே உள்ள See More என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
How to Check Youtube CTR, CPC, CPM, RPM, Ad Impression and Ad Revenue in Adsense Beta version


Step 5

பிறகு இங்கு உள்ள Views by அல்லது select secondary metrics ஆப்ஷனை கிளிக் செய்து அதில் உள்ள more metrics ஆப்ஷனை click செய்தால் உங்களது வீடியோக்களின் CTR, CPC, CPM, RPM, ad Impression, ad revenue போன்ற அனைத்து தகவல்களையும் இங்கு தெரிந்து கொள்ளலாம்.

How to Check Youtube CTR, CPC, CPM, RPM, Ad Impression and Ad Revenue in Adsense Beta version




Previous
Next Post »