நமது மொபைல் போனில் உள்ள Screenshot வசதியானது மிகவும் பயனுள்ளதாகும். நமக்கு தேவையான தகவல்கள் மற்றும் இமேஜ் ஆகிவற்றை Screenshot மூலம் மிகவும் சுலபமாக நமது மொபைலில் save செய்ய முடியும். இந்த சிறப்பம்சம் ஆனது தற்போது அனைத்து வகையான மொபைல் போன்களிலும் உள்ளது.
மொபைல் போலவே computer மற்றும் laptop பயன்படுத்துவோருக்கு Screenshot வசதி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆனால் தற்போது உள்ள Windows ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் Screenshot எடுத்து அதனை நேரடியாக இமேஜாக Save செய்வதற்கான எந்த வசதியும் இல்லை.
நமது கம்ப்யூட்டர் மட்டும் லேப்டாப்பில் உள்ள PrtSc ( Print Screen ) வசதியை பயன்படுத்தி நமது Desktop ஐ Screenshot எடுக்க முடியும் ஆனால் அதனை நேரடியாக இமேஜாக Save செய்வதற்கான எந்தவிதமான வசதியும் இல்லை.
How to Take Screenshot in Laptop & Computer
நமது Computer அல்லது Laptop Desktopஐ Screenshot எடுத்து அதனை நேரடியாக இமேஜ் ஆக Save செய்வதற்காக அனேக softwares உள்ளது. அந்த சாப்ட்வேர்களை பயன்படுத்தி மிகவும் சுலபமாக நமது மொபைலில் Screenshot எடுப்பது போலவே நமது Computer மற்றும் Laptopஇல் Screenshot எடுக்க முடியும்.
Nexus Dock For PC
Nexus Dock என்பது Winstep Software Technologies ஆல் உருவாக்கப்பட்ட Computer Software ஆகும். இந்த Softwareஐ பயன்படுத்தி நமது கம்ப்யூட்டரில் உள்ள Programs மற்றும் அப்ளிகேஷன்களை மிகவும் சுலபமாக நம்மால் பயன்படுத்த முடியும். மேலும் இந்த Softwareஐ பயன்படுத்தி நமது Computer Desktopஐ Capture செய்யவும் முடியும்.
இந்த Softwareஐ Windows XP, Vista, Windows 7/8/8.1 /10 என அனைத்து ஆப்பரேட்டிங் சிஸ்டங்களிலும் பயன்படுத்த முடியும்.
மேலும் இந்த Software இல் Style, Theme, Voices, Sounds, Effects என பலவகையான ஆப்ஷன்கள் உள்ளது அந்த ஆப்ஷன்களை பயன்படுத்தி இந்த Softwareஐ நமது விருப்பம்போல் customise செய்து கொள்ளலாம்.
How to Download Nexus Dock
Nexus Dockஇன் latest versionஐ Download செய்ய கீழே உள்ள லிங்கை Click செய்யவும்.
How to Install Nexus Dock
முதலாவது Nexus Dock softwareஐ மேலே உள்ள லிங்கை பயன்படுத்தி Download செய்யவும். பிறகு Download செய்த softwareஐ Open செய்யவும். பிறகு software இன் terms and conditions அனைத்தையும் படித்த பிறகு கீழே உள்ள I agree என்ற பாக்ஸில் டிக் செய்து விட்டு Next என்ற பட்டனை கிளிக் செய்து பிறகு அங்கு தோன்றும் Install என்ற பட்டனை கிளிக் செய்தால் இந்த software உங்களது கம்ப்யூட்டரில் install ஆகிவிடும்.
How to Use Nexus Dock
Nexus Dock Softwareஐ இன்ஸ்டால் செய்த பிறகு இந்த அப்பிளிக்கேஷன் ஆனது உங்களது Desktop மேலே தோன்றும். அதில் start, recycle bin, Time, date, Clock, Browser, Map, Capture Desktop போன்ற ஆப்ஷன்கள் இருக்கும். இந்த ஆப்ஷன்களை நீக்கிவிட்டு உங்களுக்குத் தேவையான அப்ளிகேஷன்களை நீங்கள் இங்கு Add செய்யவும் முடியும்.
நீங்கள் இங்கு உள்ள ஆப்ஷனில் ஏதாவது ஒன்றை நீக்க விரும்பினால் அந்த ஆப்ஷன் மீது Right கிளிக் செய்து அங்கு தோன்றும் ஆப்ஷன்களில் remove from dock என்ற ஆப்ஷனை கிளிக் செய்தால் நீங்கள் Select செய்த ஆப்ஷன் ஆனது Delete ஆகிவிடும்.
நீங்கள் இதில் புதிதாக ஏதாவது அப்ளிகேஷனை Add செய்ய விரும்பினால் Nexus Dockஇன் மீது Right கிளிக் செய்து அங்கு தோன்றும் ஆப்ஷன்களில் insert new dock item என்ற ஆப்ஷனை கிளிக் செய்து உங்களுக்கு தேவையான ஆப்ஷனை Add செய்து கொள்ளலாம். அல்லது நேரடியாக அப்ளிகேஷனை Nexus Dockஇன் மீது Move செய்தால் அந்த அப்ளிகேஷன் ஆனது அதில் add ஆகிவிடும்.
How to Take Screenshot ( Capture Desktop )
Nexus Dockஇல் உள்ள Capture Desktop என்ற ஆப்ஷனை கிளிக் செய்தால் உங்களது Desktop ஆனது முழுவதுமாக Capture ஆகிவிடும். அதாவது நீங்கள் அந்த ஆப்ஷனை கிளிக் செய்தவுடன் உங்களது Desktop இல் உள்ள அனைத்தும் Capture செய்யப்பட்டு உங்களது டெக்ஸ்டாப்பில் JPG இமேஜ் ஆக Save ஆகும். இந்த Capture செய்யப்பட்ட இமேஜை நீங்கள் எங்கு வேண்டுமென்றாலும் Copy மற்றும் Move செய்யலாம்.
ConversionConversion EmoticonEmoticon