Audio MP3 Editor APK
Audio MP3 editor என்பது ஆடியோக்களை edit செய்ய பயன்படுத்தப்படும் மொபைல் அப்ளிகேஷன் ஆகும். இந்த அப்ளிகேஷனை உபயோகப்படுத்தி மிகவும் சுலபமாக நமது மொபைல் பயன்படுத்தியே நமக்குத் தேவையான ஆடியோக்களை நமது விருப்பம் போல் edit செய்ய முடியும்.
மேலும் இந்த அப்ளிகேஷனில் Trime Audio, Merge Audio, Video to audio Converter, Mix Audio, Mp3 Tag Editor, Audio Converter போன்ற பலவகையான சிறப்பம்சங்கள் உள்ளன. இந்த அப்ளிகேஷனை எவ்வாறு டவுன்லோட் செய்வது மற்றும் இவ்வாறு உபயோகப் படுத்துவது என்பதை கீழே பார்க்கலாம்.
How to download Audio MP3 Editor APK
இந்த அப்ளிகேஷனை டவுன்லோட் செய்ய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
How to use Audio MP3 Editor APK
Download and Install
டவுன்லோட் செய்த Audio MP3 Editor அப்ளிகேஷனை உங்களது மொபைலில் இன்ஸ்டால் செய்து ஓபன் செய்யவும்.
how to trim audio
உங்களுக்கு தேவையான ஆடியோவை Trim செய்ய அந்த அப்ளிகேஷனில் உள்ள Trim Audio என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும். அதன் பிறகு உங்களுக்கு தேவையான ஆடியோவை செலக்ட் செய்யவும். அதன் பிறகு அடுத்த பக்கத்தில் தோன்றும் ஆப்ஷனை பயன்படுத்தி நீங்கள் select செய்த ஆடியோவை உங்களுக்குத் தேவையான அளவில் செலக்ட் செய்து மேலே உள்ள என்ற ஆப்ஷனை கிளிக் செய்தால் நீங்கள் Trim செய்த ஆடியோ உங்களது மொபைலில் செட் ஆகிவிடும்.
How to merge audio
இந்த ஆப்ஷனை பயன்படுத்தி உங்களுக்கு தேவையான ஒன்றுக்கும் மேற்பட்ட ஆடியோக்களை சேர்த்து ஒரே ஆடியோவாக உருவாக்க முடியும். உங்களது ஆடியோக்களை Merge செய்ய முதலாவது இந்த அப்ளிகேஷனில் உள்ள Merge Audio என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும் . அதன் பிறகு அங்கு உள்ளAdd Audio என்ற ஆப்ஷனை பயன்படுத்தி உங்களது ஆடியோக்களை ஒன்றன்பின் ஒன்றாக Add செய்து அதன் பிறகு கீழே உள்ள Merge Audio என்ற ஆப்ஷனை கிளிக் செய்தால் நீங்கள் Add செய்த அனைத்து ஆடியோக்களும் ஒரே ஆடியோவாக Save ஆகிவிடும்.
How to mix audio
மிக்ஸ் ஆடியோ என்பது இரண்டு வெவ்வேறான ஆடியோக்களை ஒன்றாக இணைத்து அந்த ஒரே ஆடியோவில் இரண்டு ஆடியோக்களை கேட்கும் வகையில் உருவாக்குவதாகும். உதாரணமாக ஒரு ஆடியோவில் நீங்கள் ஏதாவது ஒரு டயலாக் அல்லது வாய்ஸ் போன்றவற்றை இணைக்க விரும்பினால் இந்த ஆப்ஷன் உங்களுக்கு உபயோகமானதாக இருக்கும்.
உங்களது ஆடியோக்களை மிக்ஸ் செய்ய முதலாவது இந்த அப்ளிகேஷனில் உள்ள மிக்ஸ் ஆடியோ என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும். அதன்பிறகு உங்களுக்கு தேவையான இரண்டு ஆடியோக்களை செலக்ட் செய்து மிக்ஸ் ஆடியோ என்ற ஆப்ஷனை கிளிக் செய்தால் நீங்கள் செலக்ட் செய்த இரண்டு ஆடியோக்களும் மிக்ஸ் ஆகிவிடும்.
Tag editor
Tag Editor பயன்படுத்தி நீங்கள் விரும்பும் ஆடியோவில் artist name, album name, title, , composer name, album image, year போன்ற தகவல்களை Add செய்ய முடியும். இந்த ஆப்ஷனை பயன்படுத்த விரும்பினால் முதலாவது Audio MP3 Editor அப்ளிகேஷனில் உள்ள Tag Editor என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும். அதன்பிறகு நீங்கள் விரும்பும் ஆடியோவை செலக்ட் செய்யவும். அதன் பிறகு நீங்கள் Add செய்த ஆடியோவின் artist name, album name, title, , composer name, album image, year போன்ற தகவல்களை எடிட் செய்வதற்கான ஆப்ஷன்கள் தோன்றும். அந்த ஆப்ஷனை பயன்படுத்தி நீங்கள் விரும்பும் தகவல்களை Add செய்து பிறகு கீழே உள்ள Save என்ற ஆப்ஷனை க்ளிக் செய்தால் நீங்கள் Add செய்த தகவல்கள் அனைத்தும் Save ஆகிவிடும்.
How to convert MP3
இந்த ஆப்ஷனை பயன்படுத்தி நமக்கு தேவையான ஆடியோக்களை wav, MP3, MP4, போன்றவைகள் ஆக Convert செய்ய முடியும். இந்த ஆப்ஷனை நீங்கள் பயன்படுத்த விரும்பினால் Audio MP3 Editor அப்ளிகேஷனில் உள்ள mp3 Converter என்ற ஆப்ஷனை பயன்படுத்தி உங்களுக்கு தேவையான ஆடியோக்களை Convert செய்து கொள்ளவும்.
How to convert video to audio
Audio MP3 Editor அப்ளிகேஷனில் உள்ள இந்த ஆப்ஷனை பயன்படுத்தி நீங்கள் விரும்பும் வீடியோக்களை mp3 ஆடியோவாக Convert செய்ய முடியும். இந்த ஆப்ஷனை நீங்கள் பயன்படுத்த விரும்பினால் Audio MP3 Editor அப்ளிகேஷனில் உள்ள Video to Audio என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும். அதன்பிறகு நீங்கள் Convert செய்ய விரும்பும் வீடியோவை செலக்ட் செய்து மேலே உள்ள Next ஆப்ஷனை க்ளிக் செய்தால் நீங்கள் Add செய்த வீடியோவானது mp3 ஆடியோவாக Convert ஆகி விடும்.
மேலே உள்ள வழிமுறைகளை பயன்படுத்தி மிகவும் சுலபமாக உங்களது மொபைல் பயன்படுத்தி நீங்கள் விரும்பும் ஆடியோக்களை நீங்கள் விரும்பும் வகையில் Edit செய்யமுடியும்.
ConversionConversion EmoticonEmoticon