உங்களது கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப்பில் தானாக சேமிக்கப்பட்டுள்ள தற்காலிகமான தேவையற்ற தகவல்களை டெலிட் செய்ய வேண்டுமா? இந்த போஸ்ட் உங்களுக்கு உபயோகமானதாக இருக்கும். நமது கம்ப்யூட்டர் மற்றும் லேப்டாப்பில் தானாக சேமிக்கப்பட்டுள்ள தற்காலிகமான தேவையற்ற தகவல்கள் எங்கு சேமிக்கப்பட்டு உள்ளது மற்றும் அதை எவ்வாறு Delete செய்வது என்பதைப்பற்றி கீழே step-by-step பார்க்கலாம்.
கீழே உள்ள இந்த வழிமுறையானது விண்டோஸ் 7/8/10 என அனைத்து ஆப்பரேட்டிங் சிஸ்டங்களுக்கும் பொருந்தும்.
How to Find Temporary Files in Windows 7/8/10
Step 1
முதலாவது உங்களது கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப்ஐ ஓபன் செய்து அதிலுள்ள Search ஆப்ஷனை பயன்படுத்தி அதில் Run என Type செய்து Run ஆப்ஷனை Open செய்யவும்.
Step 2
Open செய்த Run ஆப்ஷனில் %Temp% என Type செய்து கீழே உள்ள Ok என்ற பட்டனை கிளிக் செய்யவும்.
Step 3
அதன் பிறகு உங்களது கம்ப்யூட்டரில் சேமிக்கப்பட்டுள்ள அனைத்து தற்காலிக தகவல்களும் Temp என்ற போல்டரினுள் தோன்றும்.
How to Find Temporary Files in Windows 7/8/10
Step 4
Temp போல்டரினுள் தோன்றும் அனைத்து தகவல்களையும் Ctrl+A பயன்படுத்தி செலக்ட் செய்யவும் அல்லது டூல் பாரில் உள்ள Home ஆப்ஷனை பயன்படுத்தி அதில் உள்ள Select All என்ற ஆப்ஷனை கிளிக் செய்து அங்கு உள்ள அனைத்து தகவல்களையும் செலக்ட் செய்யவும்.
Step 5
அதன் பிறகு உங்களது Mouse பயன்படுத்தி Right Click செய்து அதில் உள்ள Delete என்ற ஆப்ஷனை கிளிக் செய்தால் நீங்கள் செலக்ட் செய்த அனைத்து தகவல்களும் Delete ஆகிவிடும் அல்லது நீங்கள் செலக்ட் செய்த தகவல்களை Delete செய்ய செய்ய உங்களது கம்ப்யூட்டரில் உள்ள Delete பட்டனையும் பயன்படுத்தலாம்.
ConversionConversion EmoticonEmoticon