ஜூன் மாதம் நடைபெற்ற Microsoft official launch இல் Windows 11 operating system ஆனது அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.
மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியிடப்பட்ட Windows 11 operating system பலவகையான சிறப்பம்சங்களுடன் வெளிவந்தது.
நம் மொபைலில் உபயோகப்படுத்தும் ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன்களை நேரடியாக Windows 11 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் பயன்படுத்தும் வசதி, பயனர்கள்Amazon அப்ளிகேஷன் ஸ்டோரில் இருந்து தங்களுக்குத் தேவையான ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன்களை நேரடியாக Windows 11 operating system இன்ஸ்டால் செய்யும் வசதி, மேலும் multitasking, start menu போன்றவற்றில் பல புதிய சிறப்பம்சங்களுடன் விண்டோஸ் 11 அறிமுகப்படுத்தப்பட்டது.
தங்களது பயனர்கள் மட்டும் இன்ஸ்டால் செய்து கொள்ளும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்ட Windows 11 ஆப்பரேட்டிங் சிஸ்டம் விரைவில் அனைவரும் பயன்படுத்தும் வகையில் வெளியிடப்படும் என குறிப்பிடப்பட்டிருந்த நிலையில் தற்போது அக்டோபர் 5 முதல் அனைத்து பயனர்களும் விண்டோஸ் 11 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை பயன்படுத்தலாம் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஏற்கனவே விண்டோஸ் 10 ஆப்ரேட்டிங் சிஸ்டத்தை உபயோகப்படுத்தும் பயனர்கள் நேரடியாக இந்த Windows 11 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை இன்ஸ்டால் செய்து கொள்ளலாம். ஆனால் நீங்கள் உபயோகப்படுத்தும் கம்ப்யூட்டர் Windows 11 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை சப்போர்ட் செய்யும் ஸ்பெசிஃபிகேஷனை கொண்டுள்ளதா என்பதை சரி பார்த்த பிறகே Windows 11 operating system இன்ஸ்டால் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
ConversionConversion EmoticonEmoticon