Telegram
டெலிகிராம் என்பது வாட்ஸ்அப், போன்ற மெசேஜிங் அப்ளிகேஷன் ஆகும். இந்த அப்ளிகேஷன் கிட்டத்தட்ட 500 மில்லியனுக்கும் அதிகமானவர்களால் டவுன்லோட் செய்து உபயோகப்படுத்தப்படுகிறது. இந்த அப்ளிகேஷன் பாதுகாப்பு மற்றும் வேகம் ஆகியவற்றை சார்ந்து உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த அப்ளிகேஷனை பயன்படுத்தி புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் ஆவணங்களை எவ்வளவு பெரிய அளவாக இருந்தாலும் சுலபமாக ஷேர் செய்ய முடியும்.
மேலும் டெலிகிராமில் உள்ள Group Chat ஆப்ஷனை பயன்படுத்தி கிட்டத்தட்ட இரண்டு லட்சம் பயனர்கள் வரை Add செய்ய முடியும்.
இந்த அப்ளிகேஷனை டவுன்லோட் செய்ய மற்றும் மேலும் தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
How to Delete Telegram Account
உங்களது டெலிகிராம் அக்கவுன்ட்டை delete செய்ய வேண்டுமா? கீழே உள்ள வழிமுறைகளை பயன்படுத்தி மிகவும் சுலபமாக உங்களது டெலிகிராம் அக்கவுன்டை delete செய்யலாம். கீழே உள்ள வழிமுறைகளை கவனமாக பார்க்கவும்.
Step 1 (Open Telegram App)
முதலாவது உங்களது மொபைலில் உள்ள டெலிகிராம் அப்ளிகேஷனை open செய்யவும்.
Step 2 (Open Settings)
அதன் பிறகு இடது பக்கத்தில் மேலே உள்ள ஆப்ஷனை பயன்படுத்தி டெலிகிராம் அப்ளிகேஷனில் உள்ள settings ஆப்ஷனை open செய்யவும்.
Step 3 (Open Telegram FAQ)
அதன் பிறகு டெலிகிராம் settings இல் உள்ள Telegram FAQ என்ற ஆப்ஷனை open செய்யவும்.
Step 4 (Select Delete Your Telegram Account)
Telegram FAQ ஆப்ஷனில் உங்களது டெலிகிராம் அக்கவுண்டின் General, Basics, Security, Account, username, Secret chat போன்ற அனைத்து விதமான ஆப்ஷன்களும் இருக்கும். அதில் Your Account என்ற ஆப்ஷனில் delete your telegram account என்ற ஆப்ஷன் இருக்கும் அந்த ஆப்ஷனை click செய்யவும்.
Step 5 (Select Deactivation Page)
அந்த ஆப்ஷனை click செய்த பிறகு உங்களது டெலிகிராம் அக்கவுண்ட்டை எவ்வாறு delete செய்வது மற்றும் உங்களது டெலிகிராம் அக்கவுன்ட்டை delete செய்தால் என்ன நடக்கும் என்பதை பற்றிய விளக்கங்கள் அங்கு கொடுக்கப்பட்டிருக்கும். அதில் deactivation page என்ற link கொடுக்கப்பட்டிருக்கும் அந்த லிங்கை click செய்யவும்.
Step 6 (Enter Your Phone Number)
அந்த லிங்கை கிளிக் செய்தவுடன் மற்றொரு பக்கத்தில் உங்களது மொபைல் நம்பரை enter செய்வதற்கான பாக்ஸ் தோன்றும். உங்களது டெலிகிராம் அக்கவுண்ட் எந்த மொபைல் நம்பரில் உள்ளதோ அந்த மொபைல் நம்பரை அங்கு type செய்து பிறகு கீழே உள்ள next பட்டனை கிளிக் செய்யவும்.
Note : உங்களது மொபைல் நம்பரை type செய்யும்பொழுது உங்களது country code கட்டாயம் உள்ளிட்ட பிறகே உங்களது மொபைல் நம்பரை enter செய்ய வேண்டும்.
Step 7 (Type Confirmation Code & Signin)
உங்களது மொபைல் நம்பரை enter செய்த பிறகு டெலிகிராமில் இருந்து உங்களது டெலிகிராம் அக்கவுண்டிற்கு ஒரு confirmation code அனுப்பப்படும். அந்த confirmation codeஐ copy செய்து இங்கு Type செய்து Sign In செய்யவும்.
Step 8 (Delete Your Telegram Account)
Sign in செய்த பிறகு உங்களது டெலிகிராம் அக்கவுன்ட்டை delete செய்வதற்கான page தோன்றும் அங்கு கீழே உள்ள delete my account என்ற பட்டனை கிளிக் செய்தால், மற்றொரு page தோன்றும் அதில் உள்ள Yes, delete my account என்ற ஆப்ஷனை click செய்தால் உங்களது telegram account delete ஆகிவிடும்.
ConversionConversion EmoticonEmoticon