New Whatsapp Features and Updates August 2021
Hi Friends, வாட்ஸ்அப் அப்ளிகேஷனில் இந்த மாதம் பல புதிய சிறப்பம்சங்கள் மற்றும் அப்டேட்கள் வரவிருக்கின்றன. என்னென்ன பல புதிய சிறப்பம்சங்கள் வாட்ஸ் அப் அப்ளிகேஷனில் வரவிருக்கின்றன என்பதை கீழே பார்க்கலாம். இந்த சிறப்பம்சங்களை நீங்கள் பயன்படுத்த வேண்டும் என்றால் முதலாவது உங்களது வாட்ஸ்அப் அப்ளிகேஷனை அப்டேட் செய்யவும்.
Disappearing Medias
Whatsappஇல் ஒருவர் உங்களுக்கு send செய்த மெசேஜ் ஆனது நீங்கள் பார்த்த உடன் தானாகவே டெலிட் ஆகிவிடும் இந்த வசதி ஏற்கனவே உள்ளது. தற்போது ஆடியோ இமேஜ் வீடியோ போன்றவற்றையும் நீங்கள் பார்த்தவுடன் தானாகவே டெலிட் ஆகும் வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
Multi-Device Support
நீங்கள் இனிமேல் உங்களது வாட்ஸ்அப் அக்கவுண்டை ஒரே நேரத்தில் பல டிவைஸ்களில் ஓபன் செய்து வைத்துக் கொள்ளலம். அதற்கு இந்த மல்டி டிவைஸ் சப்போர்ட் பயன்படுகிறது. இதற்கு முன்பு நீங்கள் ஒரே நேரத்தில் ஒரு டிவைஸில் மட்டுமே உங்களது வாட்ஸ்அப் அக்கவுண்ட்டை பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
End to End Encryption in Backup
Whatsappஇல் Message end-to-end Encryption உள்ளது போலவே நீங்கள் இனிமேல் upload செய்யும் அனைத்து Audio, image, Video அனைத்தையும் Encryption செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
Joinable Group Call
இனிமேல் நீங்கள் குரூப் காலில் எப்பொழுது வேண்டுமென்றாலும் உங்களால் Join செய்ய முடியும். இதற்கு முன்பு Group Call Start செய்தவுடன் புதிய நண்பரை add செய்ய வேண்டும் என்றால் call end செய்த பிறகே add செய்ய முடியும் தற்போது இது மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
Upload Quality
இமேஜ் மற்றும் வீடியோக்களை நீங்கள் விரும்பும் குவாலிட்டியில் அப்லோட் செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வசதியை பயன்படுத்தி உங்களிடம் உள்ள குவாலிட்டியான எந்த ஒரு வீடியோ மற்றும் இமேஜ் போன்றவற்றை நீங்கள் விரும்புபவருக்கு Send
செய்ய முடியும்.
Whatsapp Flash Calls
வாட்ஸ்அப் அக்கவுண்டில் உள்நுழையும் போது OTP type செய்ய வேண்டும். சிலசமயங்களில் OTP ஆனது சரியாக வருவதில்லை. இதனை சரி செய்யும் வகையில் Whatsapp Flash Calls சிறப்பம்சம் ஆனது அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த சிறப்பு அம்சத்தின் மூலம் இனிமேல் OTP பதிலாக நீங்கள் உங்களது மொபைல் நம்பரை என்டர் செய்த உடனே உங்களது மொபைலுக்கு missed call அனுப்பப்படும் இதன்மூலம் உங்களது அக்கௌண்ட் verify செய்யப்படும்.
Audio Message Speed
ஒருவர் உங்களுக்கு send செய்த ஆடியோவை நீங்கள் speed செய்து கேட்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த வசதியை பயன்படுத்தி ஆடியோவை நீங்கள் விரும்பும் வேகத்தில் கேட்க முடியும்.
Whatsapp Ban Removal Request
உங்களது Whatsapp Account வாட்ஸ்அப் தரப்பிலிருந்து நீக்கப்பட்டால் நீங்கள் to நேரடியாக வாட்ஸ்அப்பிற்கு மெசேஜ் செய்து உங்களது அக்கௌன்ட்டை மீண்டும் கொண்டுவர request செய்ய முடியும்.
இந்த சிறப்பம்சம் ஆனது விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
Data Transfer Android to IOS
இந்த வசதியைப் பயன்படுத்தி ஆண்ட்ராய்டு மற்றும் IOS பயனாளர்கள் தங்களது Chat மற்றும் contactஐ பரிமாறிக்கொள்ள முடியும். அதாவது நீங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் இருந்து IOS மாறினால் இந்த வசதியைப் பயன்படுத்தி மிகவும் சுலபமாக உங்களது chat அனைத்தைம் share செய்துகொள்ளலாம்.
Whatsapp New Archive Chats
Archive செய்த contact போன்றவற்றை நீங்கள் விரும்பினால் மட்டுமே பார்க்கும் வசதி அறிமுகம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதற்கு முன்பு நீங்கள் ஏதாவது ஒரு contactஐ Archive செய்தாலும் அதில் ஏதாவது notification வந்தால் அந்த contact ஆனது முதலாவதாக காண்பிக்கப்படும் இனிமேல் அவ்வாறு காண்பிக்காது.
ConversionConversion EmoticonEmoticon